ஆட்டை விழுங்கிய 15 அடி மலைப்பாம்பு - அதிர்ந்துபோன உரிமையாளர்
கம்பம் அருகே ஆடு ஒன்றை விழுங்கிய 15 அடி நீள மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே ஒட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் முடியாண்டி. இவர் வழக்கம்போல ஒட்டுக்குளம் பகுதியில் தனது ஆடுகளை மேய்த்துவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது தனது ஆடுகளில் ஒரு ஆடு குறைவதை அறிந்த அவர், காணாமல் போன ஆட்டை தேடியுள்ளார். அவ்வாறு தேடிய அவர், ஆட்டை விழுங்கிய நிலையில் மலைப்பாம்பு ஒன்று ஒட்டுக்குளம் கரையோரத்தில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வனத்துறையினர், தீயணைப்பு துறையினரை அழைத்துள்ளனர். அவர்களின் உதவியால் ஆட்டை விழுங்கிய நிலையில் இருந்த 15 அடி நீளமுள்ள பாம்பு பிடிக்கப்பட்டது. மேலும் அதனை பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதிக் கொண்டு சென்று விடுவித்தனர்.

