\
அஷ்வினி கொலை வழக்கு: அழகேசனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

அஷ்வினி கொலை வழக்கு: அழகேசனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

அஷ்வினி கொலை வழக்கு: அழகேசனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்
Published on

சென்னையில் கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கொலை செய்த அழகேசனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கே.கே.நகரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி வாசலில் கல்லூரி மாணவி அஷ்வினியை நேற்று இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாக அறுத்துக் கொலை செய்தார். மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் அடித்தால் காயமடைந்த அழகேசன் சென்னை ராஜீவ் காந்தி மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட அழகேசனை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர். அப்போது அழகேசனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே, கொல்லப்பட்ட மாணவி அஷ்வினியின் உடல் போரூர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் அவருக்கு கண்ணீர்மல்க தங்கள் இறுதி அஞ்சலியையும் செலுத்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com