டிடிவி தினகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: திகார் சிறையில் அடைப்பு
இரட்டைஇலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இரட்டைஇலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனிடம் 5 நாட்கள் போலீஸார் விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டிடிவி தினகரனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மருத்துவப் பரிசோதனை முடிந்தவுடன் டிடிவி தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று டிடிவி தினகரனின் வழக்கறிஞர் தெரிவித்தார். இவ்வழக்கு தொடர்பாக மேலும் பலரை விசாரிக்க உள்ளதாக டெல்லி போலீஸார் தெரிவித்தனர்.