\
சென்னை நகரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்கு தடை - சென்னை காவல் ஆணையர்

சென்னை நகரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்கு தடை - சென்னை காவல் ஆணையர்

சென்னை நகரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்கு தடை - சென்னை காவல் ஆணையர்
Published on

சென்னை நகரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த இன்று முதல் 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி கேட்டு காவல்துறையிடம் அணுகியுள்ள நிலையில், சென்னையிலும் போராட்டம் நடத்துவதற்கு பல அமைப்புகள் அனுமதி கேட்டு உள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் சென்னை காவல்துறை ஆணையர் அறிவிப்பினை வெளியிடுவார்.

அதன்படி சென்னை மாநகரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு செப்டம்பர் 30-ம் தேதி (நேற்று) இரவு 11 மணிக்கு தொடங்கி, அக்டோபர் 15-ம் தேதி இரவு 11 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com