தமிழகம் முழுவதும் நாளை முதல் ‘144’ தடை : எதெல்லாம் இருக்கும் ? இருக்காது ?

தமிழகம் முழுவதும் நாளை முதல் ‘144’ தடை : எதெல்லாம் இருக்கும் ? இருக்காது ?
தமிழகம் முழுவதும் நாளை முதல் ‘144’ தடை : எதெல்லாம் இருக்கும் ? இருக்காது ?

தமிழகம் முழுவதும் நாளை முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை தடுக்கும் முயற்சியாக அனைத்து மாநிலங்களும் மக்கள் கூடுவதைத் தடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதன் எதிரொலியாகத் தமிழகத்திற்கு நாளை மாலை முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் வெளியிட்டார். அதன்படி, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கும் மாவட்டங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உட்படத் தமிழகம் முழுவதும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த 1897ஆம் ஆண்டு தொற்று நோய்கள் சட்டத்தின்படி மாவட்ட எல்லைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அனைத்து காவல் ஆணையர்களும், மாவட்ட ஆட்சியர்களும் 144 சட்டப்பிரிவின் கீழ் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

144 சட்டத்தின்படி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் :

அத்தியாவசிய (பால், உணவு, சரக்கு வாகனங்கள்) மற்றும் அவசரப் பணிகளுக்கான (ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை) போக்குவரத்து இயங்கும். பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸி போன்றவை இயங்காது.

அத்தியாவசிய பொருட்களுக்கான வாகனங்கள் தவிர, மாநிலங்களுக்கு இடையேயான, மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும்.

பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது.

அத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலங்கள் செயல்படாது.

காவல்துறை, தீயணைப்புத் துறை, சிறைத்துறை, மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை இயங்கும்.

தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர் தொழில்நுட்ப தொழில் அலுவலகப் பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும். ஆனால் தனியார் மருத்துவ நிறுவனங்கள் உள்ளிட்டை இயங்கும்.

அத்தியாவசியமான பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும்.

அத்தியாவசிய கட்டடப்பணிகள் தவிர, பிற கட்டடப் பணிகள் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் பார்சல் மட்டும் அனுமதிக்கப்படும். அம்மா உணவகம் வழக்கம்போல இயங்கும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com