தூத்துக்குடி இரட்டை கொலை எதிரொலி: அதிரடி சோதனையில் சிக்கிய 14 ரவுடிகள்

தூத்துக்குடி இரட்டை கொலை எதிரொலி: அதிரடி சோதனையில் சிக்கிய 14 ரவுடிகள்

தூத்துக்குடி இரட்டை கொலை எதிரொலி: அதிரடி சோதனையில் சிக்கிய 14 ரவுடிகள்
Published on

நெல்லையில் தூத்துக்குடி சிறப்பு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 14 ரவுடிகள் பிடிபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அடுத்த பக்கப்பட்டி கிராமத்தில், தாமிரபரணி ஆற்றில் குளிப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சுடலைமணி என்ற இளைஞரையும், அவரை காப்பாற்றச் சென்ற தாத்தா முத்துசாமியையும் மர்ம கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்தது.

இதையடுத்து இந்த இரட்டைக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க தூத்துக்குடி சிறப்பு காவல்துறையினர் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு நெல்லையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சோதனையில் 14 ரவுடிகள் பிடிபட்டுள்ளனர். கூலிப்படை தலைவர்களாக செயல்பட்டதாக கூறி கண்ணபிரான், குமுளி ராஜ்குமார், எஸ்டேட் மணி உள்ளிட்ட 14 ரவுடிகள் இன்று அதிகாலை தச்சநல்லூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடமிருந்து 27 அரிவாள்கள் மற்றும் 9 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி இரட்டைக்கொலையில் இந்தக் கூலிப்படையினருக்கு தொடர்பு இருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பிடிபட்ட 14 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com