நெல்லை மாவட்டம் கடையத்தில், தமிழ்த் தேசிய கட்சியைச் சேர்ந்த 14 பேர் செல்போன் கோபுரம் மீது ஏறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, நெல்லையில் தமிழ்த் தேசிய கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அக்கட்சியைச் சேர்ந்த 14 பேர் திடீரென செல்போன் கோபுரம் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அது கடையம் பேருந்து நிலையம் அருகே உள்ள பரபரப்பான பகுதி என்பதால், கோபுரத்தின் 14 பேர் ஏறி கோஷமிட்ட சம்பவம் அங்கு சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது.
அவர்கள் அனைவரும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதபடுத்துவதை கண்டித்து தங்கள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த கடையம் காவல் துறையினர், போராட்டக்காரர்களிடம் சுமார் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை பத்திரமாக கீழே இறங்கச் செய்தனர். பின்னர் அனைவரையும் கைதுசெய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

