\
ஓராண்டில் தினசரி 14 டன் கொரோனா கழிவுகள் அகற்றம் - தமிழக அரசு தகவல்

ஓராண்டில் தினசரி 14 டன் கொரோனா கழிவுகள் அகற்றம் - தமிழக அரசு தகவல்

ஓராண்டில் தினசரி 14 டன் கொரோனா கழிவுகள் அகற்றம் - தமிழக அரசு தகவல்
Published on: 

ஏப்ரல் 2020 முதல் ஜூலை 2021வரையில் சராசரியாக தினசரி, 14டன் கொரோனா கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றம் காலநிலை மாற்றத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள், வீடுகள் மற்றும் ஆய்வகங்களில் உருவாகும் கொரோனா கழிவுகள், பொது மருத்துவக்கழிவுகள் சுத்திகரிப்பு நிறுவனங்களால் முறையாக சேகரிக்கப்பட்டு, அகற்றப்பட்டு வருகிறது. சேகரிக்கப்படும், மருத்துவக்கழிவுகளை எரிப்பதற்கு கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள எரிப்பானை பயன்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 2020 முதல் ஜூலை 2021வரையில் சராசரியாக தினசரி, 14டன் கொரோனா கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாகவும் கொரோனா அல்லாத மருத்துவக்கழிவுகள் 35டன் அகற்றப்பட்டுள்ளதாகவும் சுற்றுச்சூழல் மற்றம் காலநிலை மாற்றத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com