\
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
Published on

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நவம்பர் 4ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர், தேனி, நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள மஹா புயல் தீவிரப் புயலாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மினிக்காய் தீவுகள், மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் கேரள கடற்கரைப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 4ஆம் தேதி வங்கக்கடலில் வடக்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு ‌வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com