மீஞ்சூரில் 13 ரவுடிகள் கைது - காவல்துறை அதிரடி நடவடிக்கை
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட 94 பேரில் 13 பேரைத்தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே ரவுடிகள் நடமாட்டம் அதிகமிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மீஞ்சூர், அத்திப்பட்டு புதுநகர், வடசென்னை அனல்மின் நிலையம், வல்லூர், மணலி ஆகிய இடங்களில் ஏ.டி.எஸ்.பி., 4 டி.எஸ்.பி.க்கள், 7 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்தின் பேரில் 94 பேரை பிடித்து செல்லப்பட்டு ஏற்கனவே கணினியில் பதியப்பட்டுள்ள குற்றவாளிகளின் தகவல்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.
இதில் தனுஷ், சோபன் பாபு, சூர்யா உள்ளிட்ட 13 பேரை தவிர மற்றவர்கள் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். வழக்குகள் உள்ள 13 பேரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட உள்ளனர்.