குறிப்பிட்ட நேரத்திற்கு அரசு பேருந்துகள் வருவதில்லை எனக் கூறி திருத்தணி அருகே 13 அரசுப் பேருந்துகளை மாணவர் இயக்கத்தினர் சிறை பிடித்துள்ளனர்.
பொதட்டூர்பேட்டைக்கு அதிகாலையில் வரவேண்டிய பேருந்துகள் காலதாமதமாக வருவதாகவும், அந்தப் பகுதிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக்கோரியும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக அப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு பேருந்துகளை சிறை பிடித்துள்ளனர். இதனால் திருத்தணியிலிருந்து பள்ளிப்பட்டுக்கு செல்லும் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிப்பட்டு வட்டாட்சியர் மற்றும் திருத்தணி துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பணிக்குச் செல்வோர், கல்லூரி, பள்ளி மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.