தமிழ்நாடு
தானாக பூட்டிக் கொண்ட ஷட்டர் - உள்ளே சிக்கிய ஊழியர்கள் மீட்பு
தானாக பூட்டிக் கொண்ட ஷட்டர் - உள்ளே சிக்கிய ஊழியர்கள் மீட்பு
சென்னை தாம்பரம் அருகே பிரபல நகைக்கடையில் ஷட்டரின் தானியங்கி பூட்டு, பூட்டிக்கொண்டதால் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஊழியர்கள் மீட்கப்பட்டனர்.
தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் உள்ள தனியார் நகைக்கடையில் இரவு கடையை அடைக்கும் முன்பாக ஷட்டர் மூடியதால் எலக்ட்ரானிக் பூட்டு தானாக பூட்டிக்கொண்டது. திறக்க முடியாமல் ஊழியர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டு தவித்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சேலையூர் போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கடைக்குள் சிக்கிய பெண் ஊழியர்கள் உள்ளிட்ட 17 பேரை, இரவு 11 மணியளவில் ஷட்டரை வெல்டிங் மூலம் கட்டிங் செய்து மீட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் அனைத்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.