ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் தீக்குளிக்க முயற்சி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் தீக்குளிக்க முயற்சி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் தீக்குளிக்க முயற்சி
Published on

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் தற்கொலைக்கு முயன்றனர்.

சூலூரைச் சேர்ந்த சரவணன் என்பவர், தான் வசிக்கும் வீட்டுக்கு பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பல ஆண்டுகளுக்கு முன் மனு அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து மனு அளித்தும், வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த சரவணன், மனைவி, குழந்தைகள், தாய், தந்தை உள்ளிட்ட 13 பேருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.

அங்கிருந்த போலீசார் உடனடியாக தடுத்து, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றியதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். கூலித் தொழிலாளியான சரவணன் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்தாண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com