சபரிமலை கோவிலுக்கு செல்லும் வழியிலேயே 12 வயது சிறுமி தீடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

சபரி மலை கோவிலுக்கு சென்ற 12 வயது சிறுமி செல்லும் வழியிலேயே தீடீரென மயங்கி விழுந்துள்ளார். பரிசோதனை செய்ததில் உயிரிந்துவிட்டதாக தெரிவிக்கவே இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி  உயிரிழப்பு
சிறுமி உயிரிழப்பு முகநூல்

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் ஐயப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

எனவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சபரிமலையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர் ஐய்யப்ப பக்தர்கள். அந்தவகையில் சபரிமலை யாத்திரைக்கு சென்ற சேலத்தினை சேர்ந்த 12 வயது நிரம்பிய பத்மஸ்ரீ என்ற சிறுமி அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த் குழுவினரோடு சபரி மலைக்கு சென்றுள்ளார். அப்போது கோயிலுக்கு செல்லும் வழியான அப்பாசிமேடு என்ற பகுதியில் தீடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனை கண்ட சிறுமியின் உடன் சென்றவர்கள் சிறுமியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். சிறுமியை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிர் இழந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பத்மஸ்ரீயின் உடல் உடற்கூறாய்விற்காக பம்பா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பத்மஸ்ரீயின் திடீர் மயக்கத்தால் ஏற்பட்ட உயிரழப்புக்கு காரணம் என்னவென்று விசாரித்ததில் இவருக்கு 3 வயதில் இருந்தே இதய நோய் இருந்துள்ளது என்று கூறப்படுகிறது. எனவே இதுவே இவரின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிறுமி  உயிரிழப்பு
வெள்ள பாதிப்புகள் குறித்துபேச இபிஎஸ், ஜெயக்குமாருக்கு தார்மீக உரிமையில்லை”-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மயக்கத்தில் தீடீரென உயிர் பறிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com