\
திருவண்ணாமலை: விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்துகொண்ட சிறுவன் மரணம்; போலீஸ் விசாரணை

திருவண்ணாமலை: விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்துகொண்ட சிறுவன் மரணம்; போலீஸ் விசாரணை

திருவண்ணாமலை: விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்துகொண்ட சிறுவன் மரணம்; போலீஸ் விசாரணை
Published on

திருவண்ணாமலை அருகே விநாயகர் ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து 12 வயது சிறுவன் உயிரிழந்தது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கடந்த புதன்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், இன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது.

இதில் இசுக்கழி காட்டேரி கிராமத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் திலீப் என்ற 12 வயது சிறுவன் கலந்து கொண்டார். ஊர்வலம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் எதிர்பாராத விதமாக திலீப் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் மயக்கம் அடைந்த திலீபனை அங்கிருந்தோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

திலீபனை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விநாயகர் ஊர்வலத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com