\
லாரி மீது மோதி ஆட்டோ விபத்து: தாயின் கண்முன்னே 12 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

லாரி மீது மோதி ஆட்டோ விபத்து: தாயின் கண்முன்னே 12 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

லாரி மீது மோதி ஆட்டோ விபத்து: தாயின் கண்முன்னே 12 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!
Published on: 

கமுதி அருகே லாரியை முந்திச்செல்ல முயன்ற ஆட்டோ விபத்துக்குள்ளானதில், தாய் கண்முன்னே 12 வயது மகன் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் வீரசோழன் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கமுதி தர்காவில் வழிபாடு செய்ய ஆட்டோவில் சென்றிருக்கின்றனர். அப்போது பசும்பொன் கிராமத்திற்கு செல்லும் நுழைவாயில் அருகே முன்னால் சென்ற லாரியை ஆட்டோ முந்திக்கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறது. எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பகுதியில் மோதிய ஆட்டோ விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோ ஓட்டுநர் அருகே உட்கார்ந்திருந்த 12 வயது சிறுவன் பஷீர் அகம்மது  தனது தாயின் கண் முன்னே உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் பதட்டம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று லாரியை பறிமுதல் செய்ததுடன் லாரி ஓட்டுநரை கைது செய்து கமுதி காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com