12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுமுகநூல்
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
இந்த தேர்வை மொத்தம் 8 லட்சத்து 21ஆயிரத்து 57 பேர் எழுதவுள்ளனர். 3ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு நாளும் 45,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு முறைகேடுகளை தடுக்க 4ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் தேர்வுப் பணியில் ஈடுபட உள்ளன. தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் தேர்வறையில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது.
மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறவுள்ள பள்ளிகளில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.