\
12 தமிழக மீனவர்கள் கைது - தொடர்ந்து அத்துமீறும் இலங்கை கடற்படை

12 தமிழக மீனவர்கள் கைது - தொடர்ந்து அத்துமீறும் இலங்கை கடற்படை

12 தமிழக மீனவர்கள் கைது - தொடர்ந்து அத்துமீறும் இலங்கை கடற்படை
Published on

நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து 12 மீனவர்களை கைது செய்த இலங்கை படையினர், அவர்களது 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com