திருத்தணியில் 12 பேருக்கு டெங்கு அறிகுறி : கொசு ஒழிப்பு மும்முரம்

திருத்தணியில் 12 பேருக்கு டெங்கு அறிகுறி : கொசு ஒழிப்பு மும்முரம்
திருத்தணியில் 12 பேருக்கு டெங்கு அறிகுறி : கொசு ஒழிப்பு மும்முரம்

திருத்தணி கோட்டத்தில் 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

திருத்தணி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால், 35க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 12 பேருக்கு டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து திருத்தணி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் கொசு ஒழிப்பு பணிகளை நிர்வாகம் முடக்கிவிட்டுள்ளது. வீடு வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வு மற்றும் கொசுக்களை ஒழிக்கும் பணிகளுக்காக, தற்காலிக ஊழியர்கள் 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

காய்ச்சல் கண்டறிப்படும் இடங்களில் ‛மாஸ் கிளினிங்' செய்யப்படும் என்று திருத்தணி நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். முன்னதாக, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் டெங்கு அறிகுறியுடன் சிலர் சிகிச்சை பெற்று வருவதாக அரசு மருத்துவனைகள் சார்பில் தகவல்கள் வெளியிடப்பட்டன. இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com