டெங்கு, வைரஸ் காய்ச்சல் : மதுரையில் 12 பேருக்கு தனி வார்டில் சிகிச்சை

டெங்கு, வைரஸ் காய்ச்சல் : மதுரையில் 12 பேருக்கு தனி வார்டில் சிகிச்சை
டெங்கு, வைரஸ் காய்ச்சல் : மதுரையில் 12 பேருக்கு தனி வார்டில் சிகிச்சை

மதுரை அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் பாதித்த 12 பேருக்கு தனி வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 

தமிழகம் முழுவதும் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 பேருக்கு தனி வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சைபெரும் நிலையில், ரத்த பரிசோதனையில் 12 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் ஒருவருக்கு டெங்கு பாதிப்பும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்டம் பாப்பன்பட்டியை சேர்ந்த 14 வயது சிறுவன் காளிமுத்து உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பாதித்த 12 பேருக்கும் 24 மணிநேர தொடர் கண்காணிப்பில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com