\
விழுப்புரம்: கொரோனாவுக்கு 18 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

விழுப்புரம்: கொரோனாவுக்கு 18 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

விழுப்புரம்: கொரோனாவுக்கு 18 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு
Published on

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 18 மாத ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் நேற்று மட்டும் 2,737 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44,094 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை நேற்று ஒரே நாளில் மட்டும் 1,939 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் மட்டும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 51,699 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்புக்கு 68 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் பல பகுதிகளிலும் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 18 மாத ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. அதேபோல் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 13 வயது சிறுவனும் கொரோனாவால் உயிரிழந்தார். சிறுவன் ஏற்கெனவே தஞ்சை தனியார் மருத்துவமனையில் தசை இணைப்பு திசு சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com