குடியிருப்பு அருகே பதுங்கிய 12அடி நீள மலைப்பாம்பு: லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்

குடியிருப்பு அருகே பதுங்கிய 12அடி நீள மலைப்பாம்பு: லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்

குடியிருப்பு அருகே பதுங்கிய 12அடி நீள மலைப்பாம்பு: லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அருகே குடியிருப்பு அருகே பதுங்கியிருந்த மலைப்பாம்பை பொதுமக்கள் உதவியோடு தீயணைப்புத் துறையினர் பிடித்து காப்புக் காட்டில் விட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலை அருகே உள்ள கிளிக்குடி கிராமத்தில் உள்ள குடியிருப்பு அருகே 12அடி நீள மலைப்பாம்பு பதுங்கியிருந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் இலுப்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த இலுப்பூர் தீயணைப்புத் துறையினர் அக்கிராம பொதுமக்களின் உதவியோடு அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.

பின்னர் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அந்த மலைப்பாம்பை நார்த்தாமலை காப்புக் காட்டில் வனத் துறையினர் விட்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com