\
’எங்கள் பகுதியில் அரிய வகை 12 அடி நீள ராஜநாகம்’  : ட்வீட் செய்த ஸ்ரீதர் வேம்பு

’எங்கள் பகுதியில் அரிய வகை 12 அடி நீள ராஜநாகம்’ : ட்வீட் செய்த ஸ்ரீதர் வேம்பு

’எங்கள் பகுதியில் அரிய வகை 12 அடி நீள ராஜநாகம்’ : ட்வீட் செய்த ஸ்ரீதர் வேம்பு
Published on

ZOHO தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு அண்மையில் 12 அடி நீள ராஜநாகத்தை தன் வசிப்பிடத்திற்கு அருகே பார்த்துள்ளார். அது குறித்த தகவலை ட்வீட் மூலம் பகிர்ந்திருந்தார். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நகர பகுதியில் வசித்து வந்த அவர் தென்காசி பகுதியில் உள்ள மத்தளம்பாறை கிராமத்திற்கு குடி பெயர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“அரிய வகை 12 அடி நீள ராஜநாகம் ஒன்று வந்திருந்தது. உள்ளூர் வனத்துறை அதிகாரிகள் வந்து அதனை பத்திரமாக மீட்டு, அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டுள்ளனர். அதோடு நானும் அந்த பாம்பை தைரியத்துடன் தொட்டு பார்த்தேன்” என அவர் ட்வீட் செய்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com