\
ப்ளூவேல் விளையாடிய 11-ம் வகுப்பு மாணவர் மீட்பு

ப்ளூவேல் விளையாடிய 11-ம் வகுப்பு மாணவர் மீட்பு

ப்ளூவேல் விளையாடிய 11-ம் வகுப்பு மாணவர் மீட்பு
Published on

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ப்ளூவேல் விளையாடிய 11-ம் வகுப்பு மாணவரை ஆசிரியர்கள் மீட்டனர்.

வேலூர் மாவட்டம் காதர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவனின் நடவடிக்கையில் கடந்த சில நாட்களாக மாற்றங்கள் இருந்ததை ‌உணர்ந்த ஆசிரியர்கள், அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அந்த மாணவர் 13 நிலைகள் வரை ப்ளூவேல் கேம் விளையாடியது தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக காவல்துறையினருக்கும், மாணவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாணவர் மீட்கப்பட்டு, அவருக்கு கவுன்சிலிங் தரப்பட்டு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com