சாலையை கடக்க முயன்ற 11 வயது சிறுமி பைக் மோதி பலி

சாலையை கடக்க முயன்ற 11 வயது சிறுமி பைக் மோதி பலி

சாலையை கடக்க முயன்ற 11 வயது சிறுமி பைக் மோதி பலி
Published on

சென்னையில் சாலையை கடக்க முயன்ற 11வயது சிறுமி மீது இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் சீசோர் டவுன் 10வது அவென்யூவை சேர்ந்தவர் பிரதாப் சிங். இவரது மகள் ஸ்ரீசனா(11). இவர் பனையூர் பாரத் பெட்ரோல் பங்க் எதிரில் சாலையை கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து சென்ற பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய திருவெற்றியூரை சேர்ந்த மதுகுமரன்(39) என்பவரை கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com