Fishermen arrestedpt desk
தமிழ்நாடு
நாகை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 11 மீனவர்களை தாக்கி கைது செய்த இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேரை, இலங்கை கடற்படையினர் தாக்கி கைது செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை துறைமுகத்திலிருந்து விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், நடுக்கடலில் தங்கி மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பியுள்ளனர். இரவு 8 மணியளவில் அந்த படகுகளை, இலங்கை கடற்படையினர் விரட்டியுள்ளனர். அப்போது, ஒரு விசைப்படகை பறிமுதல் செய்து, அதிலிருந்த 11 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்துள்ளனர்.
Fishermen arrestedpt desk
முன்னதாக அந்த படகில் ஏறி இலங்கை கடற்படையினர் சோதனையிட்டதாகவும், அப்போது மீனவர்களை கடுமையாக தாக்கியதாகவும் தெரிகிறது. கைதான மீனவர்களை, யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக, இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்பின்னர் மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.