துபாயில் கொரோனாவுக்கு தாய் இறந்ததால் தவித்த 11 மாத குழந்தை - மீட்டு வர உதவிய தமிழக அரசு

துபாயில் கொரோனாவுக்கு தாய் இறந்ததால் தவித்த 11 மாத குழந்தை - மீட்டு வர உதவிய தமிழக அரசு

துபாயில் கொரோனாவுக்கு தாய் இறந்ததால் தவித்த 11 மாத குழந்தை - மீட்டு வர உதவிய தமிழக அரசு
Published on

குடும்ப வறுமை காரணமாக 11 மாத குழந்தையுடன் வேலைக்காக துபாய் சென்ற கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பெண் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், தாயை இழந்து தவித்து வந்த குழந்தையை தமிழ்நாடு அரசு மீட்டு தந்தையிடம் ஒப்படைத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வேலவன், பாரதி தம்பதிக்கு கடந்த 2008 இல் திருமணம் நடந்தது. விக்னேஸ்வரன், அகிலன், தேவேஸ் ஆகிய 3 ஆண் பிள்ளைகளை பெற்றெடுத்தது தம்பதி. பொருளாதார நெருக்கடிக்கு இடையே மருத்துவ சிகிச்சையளித்தும் சிறுநீரக செயல் இழப்பால் பாதிக்கப்பட்டிருந்த மூத்த மகன் விக்னேஸ்வரன் 13 வயதில் விக்னேஷ்வரன் உயிரிழந்தான்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் கணவன் மனைவி இருவரும் வேலையின்றி தவிர்த்ததால், குடும்ப வறுமையை போக்க கடந்த மே மாதம் 11 மாத கைக்குழந்தை தேவேஸ் உடன் துபாயில் வேலைக்கு சேர்ந்தார் பாரதி. அங்கு சென்ற சில நாட்களிலேயே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாரதி, சிகிச்சை பலனளிக்காமல் கடந்த மே 29 ஆம் தேதி உயிரிழந்தார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை கொண்டு வர முடியாத என்பதால் அவருக்கு அங்கேயே இறுதிச் சடங்குகளும் முடிக்கப்பட்டன. கைக்குழந்தை தேவேஸை பாரதியுடன் பணி புரிந்தவர்கள் பராமரித்து வந்தனர்.

தாயை இழந்து கைக்குழந்தை தவிப்பதை அறிந்த துபாய் திமுக அமைப்பாளர் மீரான், தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்ரார். இதையடுத்து 11 மாத கைக்குழந்தையை திருவாரூரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் மூலம் பாதுகாப்பாக திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வந்து, தந்தை வேலவனிடம் ஒப்படைத்தார். மனைவியை இழந்து சோகத்தில் குளமான கண்களுடன் குழந்தையை ஆரத் தழுவி பெற்று முத்தமிட்டு உணர்ச்சி வசப்பட்டார் வேலவன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com