\
11 எம்.எல்.ஏக்கள் வழக்கு - நாளை விசாரணை 

11 எம்.எல்.ஏக்கள் வழக்கு - நாளை விசாரணை 

11 எம்.எல்.ஏக்கள் வழக்கு - நாளை விசாரணை 
Published on: 

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. 

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் தனியாக இருந்தபோது, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், செம்மலை, நடராஜ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இதனை அடுத்து, 11 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக கொறடா சக்கரபாணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படவே, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஏ.கே.சிக்ரி பணி ஓய்வு பெற்றதால் அவ்வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்தது.

இதனையடுத்து நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என திமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்நிலையில் தங்க தமிழ்ச் செல்வனின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்திருந்தது. வழக்கை விசாரிக்க புதிய அமர்வு விரைவில் அமைக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி பாப்டே தலைமையில் நாளை நடைபெற உள்ளது. பாப்டே தான் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி. எனவே இவரது பணிக்காலத்திலேயே இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com