தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்
Published on

தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணைய டி.ஜி.பி.யாக இருந்த காந்திராஜன், தீயணைப்புத்துறை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் டி.ஜி.பி.யாக இருந்த ஸ்ரீலஷ்மி பிரசாத், மாநில மனித உரிமை ஆணையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளார். சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக இருந்த அபய் குமார் சிங், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை பெருநகர கிழக்கு காவல் இணை ஆணையராக இருந்த பாலகிருஷ்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி.யாகவும், வேலூர் சரக டி.ஐஜி.யாக இருந்த வனிதா சென்னை பெருநகர கிழக்கு இணை ஆணையராகவும் பணிமாறுதல் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை காவலர் பயிற்சி மைய ஐ.ஜி.யாக பணியாற்றிவந்த பாஸ்கரன், நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். 

மேலும் நெல்லை மாநகர காவல் ஆணையராக இருந்த மகேந்தர்குமார் ரதோட், சென்னை காவலர் பயிற்சி மையத்தின் டி.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் செல்வநாகரத்தினம், நெல்லை சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் சுகுனாசிங், ராமநாதபுரம் கடலோர பாதுகாப்புப்படை எஸ்.பி. சாம்சன், சென்னை ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுப்பிரிவு எஸ்.பி. ராஜன் உள்ளிட்டோரும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com