10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை - எலக்ட்ரீசியன் போக்சோ சட்டத்தில் கைது
திருவாரூரில் பத்தாம் வகுப்பு மாணவியை ஆசை காட்டி கர்ப்பமாக்கிய எலக்ட்ரீசியன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த இடையர்நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் பிரவீன் குமார் (19) எலக்ட்ரிசியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் மோசம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமாகியுள்ளார்.
இதனை அறிந்த மாணவியின் தாயார், மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகளை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய பிரவீன் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மன்னார்குடி அனைத்து மகளிர் காவல்துறையினர், பிரவீன் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

