நீர்நிலைகளை சொந்த முயற்சியில் தூர்வாரும் இளைஞர்கள் : பரிசுத்தொகையை பரிசளித்த பத்தாம் வகுப்பு மாணவி 

நீர்நிலைகளை சொந்த முயற்சியில் தூர்வாரும் இளைஞர்கள் : பரிசுத்தொகையை பரிசளித்த பத்தாம் வகுப்பு மாணவி 
நீர்நிலைகளை சொந்த முயற்சியில் தூர்வாரும் இளைஞர்கள் : பரிசுத்தொகையை பரிசளித்த பத்தாம் வகுப்பு மாணவி 

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் நீர்நிலைகளை சொந்த முயற்சியில் தூர்வாரி வரும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் தான் கட்டுரை போட்டியில் வென்ற முதல் பரிசு தொகையான மூவாயிரத்தை கொடுத்து நெகிழ வைத்துள்ளார் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அனுபிரேமா அங்குள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். கட்டுரை போட்டியில் முதல் பரிசாக வென்ற  ரூ. 3 ஆயிரத்தை நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக அக்கிராமத்து இளைஞர்களிடம் கொடுத்துள்ளார். இது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே கட்டுரை போட்டிகளில் அதிக ஆர்வமுடன் பங்கேற்று தொடர்ந்து முதல் பரிசுகளை பெற்று வந்துள்ளார்.
 2017 ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதலமைச்சரிடம் பரிசும், பதக்கமும் பெற்றார். இப்படி பல கட்டுரைப் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் அனுபிரேமா கடந்த மாதம் முத்துப்பேட்டையில் தமிழ் தாத்தா உ.வே.சா இலக்கிய மன்றம் சார்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் “பேரிடருக்குப் பின் அரசு செய்ய வேண்டிய உடனடி நிவாரணம்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதி முதல் பரிசை பெற்றார். 

அந்த மாணவிக்கு ரூ. 3 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது. இந்தப் பணத்தை அப்படியே புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் 100 நாட்களைக் கடந்தும் நீர் நிலைகளை தூர்வாரி வரும் இளைஞர்களுக்கு நன்கொடையாக அளித்து உதவினார் அனுபிரேமா. இது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com