10-ம் வகுப்பு ரிசல்ட், நாளை வெளியாகிறது

10-ம் வகுப்பு ரிசல்ட், நாளை வெளியாகிறது

10-ம் வகுப்பு ரிசல்ட், நாளை வெளியாகிறது
Published on

பத்தாம் வகுப்புப் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. நாளை காலை பத்து மணிக்கு வெளியாகும் முடிவுகளை இணையதளங்களில் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, www.tnresults.ni.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தகவல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com