திடீர் நெஞ்சுவலியால் வயலில் மயங்கிய விவசாயி.. ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வியக்கத்தகு பணி!

திடீர் நெஞ்சுவலியால் வயலில் மயங்கிய விவசாயி.. ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வியக்கத்தகு பணி!
திடீர் நெஞ்சுவலியால் வயலில் மயங்கிய விவசாயி.. ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வியக்கத்தகு பணி!

வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஒன்றறை கிலோ மீட்டர் தூரம் சேற்றில் நடந்து வந்து முதலுதவி செய்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.

தஞ்சை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் ராயப்பன் ஜெயராஜ் (47). இன்று காலை தனது வயலில் குறுவை சாகுபடிக்காக ஆரம்பகட்ட பணிகளையும், வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வயலிலேயே விழுந்திருக்கிறார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பானுப்பிரியா மற்றும் ஓட்டுநர் இருவரும், சேறு படிந்த விளைநிலத்தில் இறங்கி சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்று ராயப்பன் ஜெயராஜனுக்கு முதலுதவி கொடுத்து பின்னர் அங்கிருந்து மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

இந்த நிகழ்வுகள் அனைத்தையும் அங்கிருந்த மக்கள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்கள். வீடியோவை பார்த்த இணையவாசிகள் ஆம்புலன்ஸ் பணியாளர்களின் செயலை வெகுவாக பாராட்டியுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com