\
ஓசூர்: மலை கிராமங்களுக்கு விரைவில் 108 ஆம்புலன்ஸ் சேவை - மா.சுப்பிரமணியன்

ஓசூர்: மலை கிராமங்களுக்கு விரைவில் 108 ஆம்புலன்ஸ் சேவை - மா.சுப்பிரமணியன்

ஓசூர்: மலை கிராமங்களுக்கு விரைவில் 108 ஆம்புலன்ஸ் சேவை - மா.சுப்பிரமணியன்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மலை கிராமங்களுக்கு விரைவில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள கொடகரை கிராமத்திற்கு சென்று மலைவாழ் மக்களுடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.காந்தி ஆகியோர் கலந்துரையாடல் நடத்தி குறைகளை கேட்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து குழந்தைகள் திருமணத்தை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று 108 ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்படும் என உறுதி அளித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com