தீபாவளி அன்று 108 ஆம்புலன்ஸ் சேவை கிடையாது ?

தீபாவளி அன்று 108 ஆம்புலன்ஸ் சேவை கிடையாது ?

தீபாவளி அன்று 108 ஆம்புலன்ஸ் சேவை கிடையாது ?
Published on

தமிழகம் முழுவதும் தீபாவளி அன்று 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் 24 மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

மிக அவசரமான மருத்துவ தேவை என்றதும் பெரும்பாலான மக்களுக்கு நினைவில் வரக்கூடிய எண் 108. தமிழகத்தில் 950 க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகிறது.108 ஆம்புலன்ஸ்களில் அவசர கால மருத்துவ நிபுணர், ஓட்டுநர், கால் சென்டர் தொழிலாளர்கள் என 4500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவ சேவைக்காக வாரத்தின் ஏழு நாட்களிலும் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். 2008 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை விபத்து பிரிவு, குழந்தைகள் பிரிவு, பிரசவம் என தனித்தனியாக ஆம்புலன்ஸ்கள் இருக்கின்றன. தமிழகத்தில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையை ஜி.வி.கே மற்றும் இ.எம்.ஆர்.ஐ என்ற தனியார் அமைப்பிடம் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீபாவளிக்கு 30 சதவிகிதம் போனஸ் வழங்க வலியுறுத்தி வரும் 5 ஆம் தேதி இரவு 8 மணியில் முதல் 6 ஆம் தேதி இரவு 8 மணி வரை தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் போது விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அந்த நேரங்களில் அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் தேவைப்படும். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பட்சத்தில் அது, பல்வேறு பாதிப்புகள் உருவாகும் சுழல் உருவாகும். எனவே நிர்வாகம் தலையிட்டு எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என 108 ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஜி.வி.கே மற்றும் இ.எம்.ஆர்.ஐ நிறுவனம் வருடா வருடம் நியாயமான போனஸை வழங்காமல் தங்களை தீபாவளியின் போது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வைப்பதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com