108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

தீபாவளி அன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நடத்தவிருந்த போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்க வேண்டும், ஊக்கத்தொகை 5,300ல் இருந்து 12,000 ஆக உயர்த்தப்பட வேண்டும், 2 ஆண்டுகளாக
நிலுவையில் உள்ள விடுப்பு தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீபாவளி அன்று, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு 108 அவசர ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் அக்டோபர் 18ஆம் தேதி இரவு 8 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் 4,000 தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்றும், தமிழக அரசும்-ஜி.வி.கே நிர்வாகமும் தங்களை அழைத்து பேசி உரிய தீர்வு காண வேண்டும் எனவும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் போராட்ட அறிவிப்பு தொடர்பாக வழக்கறிஞர் பாட்ரிக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com