மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை!
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில்,சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மலர்தூவி வணங்கினார்.
தொடர்ந்து, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.எ
மேலும், கோபாலபுரம் இல்லத்தில் தயாளு அம்மாளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஸ்டாலின், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும், அதற்காக தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், 102 ஆவது பிறந்தநாள் என்பதால், மாநிலம் முழுவதும் 102 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் சிறப்பாக செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றத்திற்கு செல்வோம் என்ற அச்சத்தில் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார் என்றும் தெரிவித்தார்.