முண்டியம்பாக்கம் அரசு மருத்துவர் வீட்டில் 100 சவரன் கொள்ளை.. என்ன நடந்தது?
கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட புதுபிள்ளையார்குப்பம் கிராமத்தில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ராஜா என்பவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
முதலில் 152 சவரன் நகைகள் மற்றும் 10 லட்சம் ரூபாய் பணமும் கொள்ளைப் போனதாக செய்தி வெளியான நிலையில், காவல்துறையினர் அரசு மருத்துவர் வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர்.
100 சவரன் நகை மட்டுமே கொள்ளை..
அரசு மருத்துவர் வீட்டியில் 152 சவரன் நகையும், 10 லட்ச ரூபாய் பணமும் கொள்ளை போனதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் அங்கு நேரில் சென்று விசாரணையை தீவீர படுத்தினர்.
அப்போது விசாரனையில் கொள்ளை போனது 100 சவரன் தங்க நகை மட்டுமே என்றும், ரொக்க பணம் 10 லட்ச ரூபாய் பாதுகாப்பாக இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவம் பண்ருட்டி சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.