நேற்று பெய்த கன மழையில் ஒரே நாளில் 100 ஏரிகள் நிரம்பின

நேற்று பெய்த கன மழையில் ஒரே நாளில் 100 ஏரிகள் நிரம்பின
நேற்று பெய்த கன மழையில் ஒரே நாளில் 100 ஏரிகள் நிரம்பின

சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவண்ணாமலையில் 919 ஏரிகள் முழுக்கொள்ளவை எட்டியுள்ளன.

கனமழை காரணமாக, திருவண்ணாமலை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில், காஞ்சிபுரத்தில் உள்ள 338 ஏரிகளும், செங்கல்பட்டில் உள்ள 489 ஏரிகளும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 82 ஏரிகளும் சென்னையில் 16 ஏரிகளும் அதன் முழு கொள்ளவை எட்டி நிரம்பியுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம் மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 381 ஏரிகளில் 338 ஏரிகள் 100 சதவிகிதமும், 38 ஏரிகள் 75 சதவிகிதமும், 5 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன.செங்கல்பட்டு மாவட்டம மொத்த ஏரிகள் எண்ணிக்கை 528 ஏரிகளில் 480 ஏரிகள் 100 சதவிகிதமும், 47 ஏரிகள் 75 சதவிகிதமும், 1 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்த ஏரிகளில் எண்ணிக்கையை 93 ஏரிகளில் - 82 ஏரிகள் 100 சதவிகிதமும், 11 ஏரிகள் 75 சதவிகிதமும், நிரம்பியுள்ளன. சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்த ஏரிகள் எண்ணிக்கை 16 ஏரிகளும் 100% முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

திருவண்ணாமலை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 819 ஏரிகள் 100% தன் முழு கொள்ளளவை எட்டி இருந்த நிலையில் நேற்று பெய்த கன மழையில் ஒரே நாளில் மட்டும் 100 ஏரிகள் கூடுதலாக 100% தன் முழு கொள்ளளவை எட்டி, தற்போது 919 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன. 97 ஏரிகள் 75 சதவிகிதமும், 6 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன. இந்த மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 1022 ஆகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com