பட்டாசு வெடிப்பு விதிமீறல் : தமிழகத்தில் 100 பேர் மீது வழக்கு

பட்டாசு வெடிப்பு விதிமீறல் : தமிழகத்தில் 100 பேர் மீது வழக்கு

பட்டாசு வெடிப்பு விதிமீறல் : தமிழகத்தில் 100 பேர் மீது வழக்கு
Published on

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் 100க்கும் அதிகமானோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற உத்தரவிட்டிருந்து. ஆனால் தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக ‌அரசு அனுமதி அளித்திருந்தது. 

இந்த நிலையில் அனுமதி அளிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக கோவையில் 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பூர் மாநகரில், விதியை மீறி பட்டாசு வெடித்ததாக 42 பேர் மீதும், விழுப்புரம் மாவட்டத்தில் 30 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக 6 பேரை சேரன்மகாதேவி காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் இவர்கள் அனைவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதுதவிர, அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக சென்னை உள்ளிட்ட இடங்களிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, விதியை மீறி பட்டாசு வெடித்தவர்களைக் கைது செய்வது காவல்துறையின் கடமை என ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com