10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : 3 பேருக்கு தூக்கு தண்டனை
10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் மூன்று பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே கடந்த 2014ஆம் ஆண்டு பள்ளிக்குச் சென்ற 10 வயது சிறுமி வீடு திரும்பவில்லை என அவரின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டு இருந்தது பின்னர் தெரியவந்தது. இதுதொடர்பாக சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகியோர் மீது ஓடைப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மூவரும், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகிய மூவருக்கும் தூக்குத்தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கொடூர குற்றத்திற்காக மூவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு கருணைத் தொகை வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

