சென்னையில் தண்ணீர் லாரி மோதி 10 வயது சிறுமி உயிரிழப்பு!

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் தண்ணீர் லாரியின் சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுமி உயிரிழந்தார்.

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி. இவர் இன்று வழக்கம்போல் தனது 10 வயது மகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தண்ணீர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த 10 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுமி உயிரிழப்பு

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், “விபத்து நடைபெற்ற இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தேன். சம்பவம் நடைபெற்ற இடத்தில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. சாலைகள் குறுகலாக இருப்பதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. மேலும் தண்ணீர் லாரி எடுத்துச் செல்லக்கூடிய வாகனங்கள் சட்டவிரோதமாக செல்வதும் கண்டறியப்பட்டுள்ளது. இப்படியானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தண்ணீர் கொண்டுசெல்வதற்கான நேரம் திட்டப்பட்டு இருக்கிறது. அதன்படி தண்ணீரைக் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்தில் தொடர்புடைய நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com