சைக்கிள் மீது குடிதண்ணீர் வாகனம் மோதி விபத்து: 10 வயது சிறுவன் உயிரிழப்பு
அருப்புக்கோட்டையில் சைக்கிள் மீது குடிதண்ணீர் வாகனம் மோதியதில் சைக்கிளில் சென்ற 10 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அருப்புக்கோட்டை அருகே அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவர் மகன் விஷ்வா(10). தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் அருப்புக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீடுகளுக்கு அவ்வபோது சைக்கிளில் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று வழக்கம்போல் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு சிறுவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது, பெரியண்மாய் அருகே பந்தல்குடி சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த குடிதண்ணீர் வாகனம் எதிர்பாராத விதமாக சிறுவனின் சைக்கிளின் மீது மோதியது.
இதில் வாகனத்தின் அடியில் சிக்கிய சிறுவன் விஷ்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து வாகத்தின் ஒட்டுனரை காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.