10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்முகநூல்

வெளியானது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; எவ்வளவு சதம்?..யார் முதல் 5 இடம்?... முழு விபரம்!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
Published on

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு முடிவுகள் காலை 9 மணிக்கு வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தவகையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ். கடந்த ஆண்டைவிட 2.25% தேர்ச்சி விகிதம் அதிகம் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி www.tnresults.nic.in மற்றும் https://results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளைப் பெறலாம்.

அதேபோல், மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதும் போது பதிவு செய்த கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தேர்ச்சி விகிதம்!

தேர்ச்சி பெற்றவர்கள் :8,17,261 : 93.80%

மாணவிகள்: 4,17,183 : 95.88%

மாணவர்கள்: 4,00,078 : 91.74%

தமிழகத்தில் தேர்வெழுதிய மாணவ, மாணவியரில் 93.80 % பேர் தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக 4.14% தேர்ச்சி பெற்று உள்ளனர்.

பாட வாரியாக தேர்ச்சி விகிதம்!

NGMPC22 - 168

100க்கு 100 மதிப்பெண்கள்

10ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தில் 10,838 பேரும்,

சமூக அறிவியலில் 10,256 பேரும்.

கணிதம் 1,996 பேரும்,

ஆங்கிலம் 346,

தமிழ் 8 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

முதல் 5 இடங்களை பெற்ற மாவட்டங்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com