\
சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா: தடுப்பு நடவடிக்கை தீவிரம்

சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா: தடுப்பு நடவடிக்கை தீவிரம்

சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா: தடுப்பு நடவடிக்கை தீவிரம்
Published on

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்கள் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்கள் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தொற்று உறுதியான 12 பேரில் 3 பேருக்கு அறிகுறிகள் இல்லை எனவும், 9 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.  இதனையடுத்து ஐஐடி வளாகத்தில் நேரில் ஆய்வு செய்த மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தொற்று உறுதிசெய்யப்பட்ட மாணவர்களுடன் தொடர்பில் இருந்த 50க்கும் மேற்பட்டோரை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று கணிசமாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com