திருச்சி: சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 10 பேர் 2வது நாளாக உண்ணாவிரதம்

திருச்சி: சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 10 பேர் 2வது நாளாக உண்ணாவிரதம்
திருச்சி: சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 10 பேர் 2வது நாளாக உண்ணாவிரதம்

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 10 பேர் 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் கடவுசீட்டு தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 10 பேர் தங்களை விடுவிக்க கோரி 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சிறப்பு முகாமில் உள்ள 103 இலங்கை தமிழர்களில், கடவுசீட்டு தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும், தங்களை இதுவரை விடுதலை செய்யாத நிலையில், தங்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி 10 பேர் 2வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com