தமிழ்நாடு
தஞ்சை அரசு மருத்துவமனையில் பிடிபட்ட பாம்புகள் - பொது மக்கள் அச்சம்
தஞ்சை அரசு மருத்துவமனையில் பிடிபட்ட பாம்புகள் - பொது மக்கள் அச்சம்
தஞ்சை அரசு மருத்துவமனையில் இதுவரை 10 நச்சுள்ள பாம்புகள் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை அரசு மருத்துவமனையில் மகப்பேறு குழந்தைகள் நலம் மற்றும் கண் மருத்துவமனை பிரிவுகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு தஞ்சை மட்டுமின்றி திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து நாள்தோறும்
நூற்றுக்கணக்கான நோயாளிகளும் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.
வளாகம் முழுவதும் புதர் மண்டி கிடப்பதால் பாம்புகள் அதிகளவில் அலைந்து கொண்டிருப்பதாகப் புகார்கள் வந்தன. ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுத்தம் செய்யப்பட்டு ஐந்துக்கும் மேற்பட்ட விஷம் உள்ள நச்சுப் பாம்புகள் பிடிக்கப்பட்டன. கடந்த 4 நாட்களுக்கு முன்பு பணி முடித்து இரவு சென்றுகொண்டிருந்த செவிலியரைப் பாம்பு கடித்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் புதர்கள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அப்போது பாம்புகள் அதிக அளவு தென்படவே, உடனே அவற்றைப் பிடிப்பவர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதனையடுத்து கடந்த இரண்டு நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட நச்சுப் பாம்புகள் பிடிபட்டுள்ளன.
மேலும் பாம்பு உள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

