காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு: நீண்ட இழுபறிக்குப் பின் உறுதிசெய்த திமுக!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
காங்கிரஸ், திமுக
காங்கிரஸ், திமுகட்விட்டர்

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. கட்சிகளுக்குள் கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிகள் பங்கு பிரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.

முன்னதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் என திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அந்த கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பிறகு, மார்க்சிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து நீண்ட இழுபறிக்குப் பின் மதிமுகவிற்கு 1 தொகுதியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதியும் ஒதுக்கப்பட்டன. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு லோக் சபா தேர்தலில் திமுக சீட் ஒதுக்கவில்லை. ஆனால், மாநிலங்களவை தேர்தலில் 1 இடம் ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ளது. இதையடுத்து, அக்கூட்டணி சார்பில் 40 இடங்களில் தமது கட்சி பிரசாரம் செய்யும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

அந்த வகையில், தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுச்சேரியில் 1 தொகுதி என 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலினும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் கையெழுத்திட்டனர்.

தொகுதிப் பங்கீட்டுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “40 தொகுதிகளிலும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்” என்றார்.

காங்கிரஸ், திமுக
ஐ.யூ.எம்.எல். - கொ.ம.தே.க. கட்சிகளுக்கு தலா 1 தொகுதி: உறுதிசெய்த திமுக!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com