10 ரூபாய் மருத்துவர் டி.கே.ரத்தினம்
10 ரூபாய் மருத்துவர் டி.கே.ரத்தினம்pt web

10 ரூபாய் டாக்டர் மறைவு.. “ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு” பொதுமக்கள் வேதனை

பட்டுக்கோட்டையில் ஏழை மக்களுக்கு மருத்துவ சேவையாற்றி வந்த 10 ரூபாய் டாக்டர் என அழைக்கப்படும், மருத்துவர் டி.கே.ரத்தினம் இயற்கை எய்தினார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என வேதனை தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.
Published on

செய்தியாளர் I.M.ராஜா

பட்டுக்கோட்டையில் ஏழை மக்களுக்கு மருத்துவ சேவையாற்றி வந்த 10 ரூபாய் டாக்டர் என அழைக்கப்படும், மருத்துவர் டி.கே.ரத்தினம் இயற்கை எய்தினார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என வேதனை தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.

10 ரூபாய் மருத்துவர் டி.கே.ரத்தினம்
10 ரூபாய் மருத்துவர் டி.கே.ரத்தினம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த மருத்துவர் டி.கே.ரத்தினம். இவர் 17.09.1929 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். ஏழைகளுக்காக சேவையாற்றி வந்த அவர், 96ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

65 ஆண்டுகளாக பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு சிகிச்சை அளித்த ரத்தினத்துக்கு, ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்க வேண்டும் என்பதே நோக்கம். அதன்படி ஆரம்ப காலத்தில் நோயாளிகளிடம் 2 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுள்ளார். நாளடைவில் 10 ரூபாய் கட்டணமாக வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி ஆரம்ப காலகட்டங்களில் பிரசவத்திற்கு வரும் கிராமப்புற பெண்களிடம் மருத்துவத்திற்கு 10 ரூபாய் மட்டுமே பெற்றுக் கொள்வார். இதனால் பட்டுக்கோட்டை பகுதிவாசிகள் மருத்துவர் ரத்தினத்தை, 10 ரூபாய் டாக்டர் என்றே அழைத்துள்ளனர்.

10 ரூபாய் மருத்துவர் டி.கே.ரத்தினம்
ட்ரம்ப் - மஸ்க் இடையே முற்றும் மோதல்.. கேலி செய்யும் ரஷ்யா!

இதுவரை 65,000 சுக பிரசவங்களை பார்த்துள்ள அவர், நேர்த்தியான மருத்துவத்தால் மக்களை பல்வேறு நோய்களின் பிடியில் இருந்து காத்துள்ளார். சாலைகள், பாலங்கள் இல்லாத காலத்திலும் கையில் சூட்கேஸை எடுத்துக் கொண்டு, டார்ச் விளக்கு ஒளியில் கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

10 ரூபாய் மருத்துவர் டி.கே.ரத்தினம்
10 ரூபாய் மருத்துவர் டி.கே.ரத்தினம்

இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் என பல்வேறு நாடுகளுக்கு பயணித்து, அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கற்றறிந்து ஏழை மக்களுக்கு சேவையாற்றியவர் ரத்தினம் என பாராட்டுகின்றனர் பட்டுக்கோட்டைவாசிகள். அவர் மறைந்தாலும் அவரது சேவை மக்களின் மனதில் எப்போதும் வாழும் என்பதை மறுப்பதற்கில்லை...

10 ரூபாய் மருத்துவர் டி.கே.ரத்தினம்
“எங்கள் பங்கு இல்லையென்றாலும்...” 11 ரசிகர்கள் உயிரிழந்த விவகாரத்தில் KSCA நிர்வாகிகள் ராஜினாமா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com