முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இதுவரை 10 எம்.பி.க்கள் ஆதரவு

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இதுவரை 10 எம்.பி.க்கள் ஆதரவு
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இதுவரை 10 எம்.பி.க்கள் ஆதரவு

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இன்று மேலும் 5 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர் தொகுதி எம்.பி செங்குட்டுவன், தூத்துக்குடி தொகுதி எம்.பி ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, பெரம்பலூர் தொகுதி எம்.பி மருதராஜா ஆகியோர் சசிகலா தரப்பில் இருந்து விலகி முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்துள்ளனர். அதேபோல், விழுப்புரம் தொகுதி எம்.பி ராஜேந்திரன், விழுப்புரத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் லெட்சுமணன் ஆகியோரும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். பசுமை வழிச்சாலையில் முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்த அவர்களை, ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றார்.

ஏற்கனவே முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மாநிலங்களவை எம்.பி மைத்ரேயன், நாமக்கல் எம்.பி சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி அசோக் குமார், திருப்பூர் எம்.பி சத்தியபாமா, திருவண்ணாமலை எம்.பி வனரோஜா ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதன் மூலம் பன்னீர்செல்வம் அணியில் எம்.பி.க்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com